உக்ரைனின் தோல்வி...தைவான் மீதானத் தாக்குதலுக்கு சீனாவை ஊக்கப்படுத்தும்: தைவான் அதிகாரி
உக்ரைன் போரில் ரஷ்யா வெல்லும் என்றால், அது தைவான் மீதான படையெடுப்பிற்கு சீனாவை ஊக்கப்படுத்தும் என தைவானின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாக
போலந்தில் நடந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட தைவான் இராணுவ அதிகாரி குறித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதன் பின்னர் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில நாடுகளுக்கு தைவான் மீது ஒரு அனுதாபம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் சீனாவுடன் மட்டுமே முறையான தூதரக உறவுகளைப் பேணுகின்றன, தைவானுடன் அல்ல. மட்டுமின்றி, அமெரிக்கா போலன்றி ஐரோப்பிய நாடுகள் எதுவும் தைவானுக்கு ஆபத்தான ஆயுத ஒப்பந்தங்களும் முன்னெடுபதில்லை.
மேலும் சீனாவின் கோபத்திற்கு பயந்து ஐரோப்பிய நாடுகள் தைவானை பெயரளவிற்கே ஆதரத்தும் வந்துள்ளது. மட்டுமின்றி, தைவானிய இராணுவ அதிகாரிகள் ஐரோப்பாவிற்கு வெளிப்படையாக வருகை தருவதும் மிகவும் அசாதாரணமானது.
இந்த நிலையில், வார்சா பாதுகாப்பு மன்றத்தில் உரையாற்றிய தைவானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை பொதுப் பணியாளர்களின் துணைத் தலைவர் Hsieh Jih-Sheng, உக்ரைன் போரை மிக உன்னிப்பாக தைவான் கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் வெற்றியை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் இருந்து தங்களுக்கு கற்றுக்கொள்ள அதிகமிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை தீவிரப்படுத்தும்
உக்ரைனின் தோல்வி, சீனா தைவானை நோக்கி உக்கிரமானத் தாக்குதலை முன்னெடுக்கும் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படும் என்றார். சீனா மற்றும் ரஷ்யாவின் கூட்டு இராணுவப் பயிற்சி குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தும் அதே வேளை, தைவான் மீது சீனா திரும்பும் என்றால், உலகம் இருமுனை புவிசார் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்றார்.
இன்று ஐரோப்பா, நீங்கள் உங்கள் சொந்த பாதுகாப்பிற்காக போராடுகிறீர்கள். நீங்கள் எங்களுக்கு உதவி செய்தால், இந்தோ-பசிபிக் பகுதியில் போர் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்றார்.
ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளுக்கு தைவான் ஆதரவளித்துள்ளது, மேலும் மிகச் சிறிய உக்ரேனிய இராணுவம் அதன் பெரிய அண்டை நாடான ரஷ்ய இராணுவத்துடன் எவ்வாறு சண்டையிட முடிந்தது என்பதையும் ஆய்வு செய்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |