மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு திட்டமிட்ட கல்லூரி மாணவன்: பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்
மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்த திட்டமிட்ட டெலாவேர் பல்கலைக்கழக மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு திட்டமிட்ட மாணவன்
பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க குடியுரிமை பெற்ற 25 வயது லுக்மான் கான்(Luqmaan Khan) என அடையாளம் காணப்பட்ட டெலாவேர் பல்கலைக்கழக மாணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பல்கலைக்கழக வளாகத்தில் மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது கண்டறியப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 24ம் திகதி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கானிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் துப்பாக்கிகள் மற்றும் கவச உடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் அவரிடம் இருந்து, அனைவரையும் கொல்வது மற்றும் தியாகம் அடைவது குறித்த அதிர்ச்சியூட்டும் குறிப்பேடுகளும்(manifesto) கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாரிடம் பிடிபட்ட லுக்மான் கான்

டெலாவேர் பல்கலைக்கழக மாணவர் லுக்மான் கான் இரவில் பிக்கப் ட்ரக்கில் இருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேகத்தின் பேரில் அவர் இருந்த காரை சோதனையிட்ட பொலிஸார், 357 காலிபர் க்ளோக் கைத்துப்பாக்கியை கண்டெடுத்தனர்.
அதில் 27 சுற்றுகள் நிரப்பப்பட்டு மைக்ரோபிளாஸ்டிக் மாற்றும் கருவியுடன் பொருத்தப்பட்டிருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |