பிரான்சில் கொரோனா காரணமாக இந்த நோயை கண்டறிவதில் தாமதம்! வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, புற்று நோய்களை கண்டறிவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பிரான்சில் புற்று நோய் காரணமாக கிட்டத்தட்ட 200,000 பேர் உயிரிழக்கின்றனர். 400,000 புதிய புற்றுநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 100,000 நோயாளிகள் கண்டறியப்படாமல் போயுள்ளதாக Ligue contre le cancer (LCC), நிறுவனத்தின் தலைவர் Axel Kahn அறிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் எனவும், மருத்துவமனைகளில் திடீர் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதால் சரியான சிகிச்சைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மொத்தமாக 2020-ஆம் ஆண்டில் 23 சதவீதம் புற்று நோயாளிகள் கண்டறியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.