தகனம் செய்ய சாலையில் நீண்ட வரிசையில் குவிந்து கிடக்கும் சடலங்கள்! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி
இந்தயாவில் தகனம் செய்ய சாலையில் நீண்ட வரிசையில் சடலங்கள் குவிந்து கிடக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது.
குறித்து வீடியோ தலைநகர் டெல்லியில் உள்ள சுபாஷ்நகர் சுடுகாட்டில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.
அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மே 3ம் திகதி வரை முழு ஊரடங்கை நீட்டிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஆக்ஸிஜனை விநியோகம் செய்யக்கோரி மருத்துவமனைகள் நீதிமன்றத்தை நாடின. மேலும், உதவிக்கரம் நீட்டுமாறு டெல்லி அரசு வெளிநாடுகளையும் நாடியது.
தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை கிடைக்காமல் கொத்து கொத்தாக மக்கள் பலியாகினர், இறந்தவர்களின் சடலங்களை குவியல் குவியலாக தகனம் செய்ய வேண்டிய துயர நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், சுபாஷ்நகர் சுடுகாட்டில் தகனம் செய்ய சடலங்கள் நீண்ட வரிசையில் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சுடுகாட்டில் பல சடலங்கள் தகனம் செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், தகனம் செய்ய சாலையில் பல சடலங்கள் வரிசையாக காத்துக்கிடப்பதை வீடியோ காட்டுகிறது.
Shubhashnagar Crematorium. pic.twitter.com/pXQmWKXC0s
— Dr. Navjot Dahiya (@Shayarcasm) April 26, 2021
குறித்த காட்சி தங்கள் இதயத்தை நொறுங்கச் செய்ததாக வீடியோவை கண்ட பலர் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.