அரசு குடியிருப்பில் வளர்ந்தவர்... ரூ 8,000 பணத்துடன் வெளிநாடு பயணம்: இன்று மலைக்கவைக்கும் சொத்து மதிப்பு
டெல்லியில் அரசு குடியிருப்பு ஒன்றில் வளர்ந்தவர். பொருளாதார நிலையில் கடும் நெருக்கடியை சந்தித்தவர் இன்று அமெரிக்காவில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
கடின உழைப்பின் மதிப்பு
1960ல் பஞ்சாபை சேர்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்த ராஜ் சர்தானா 1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் டெல்லியில் அரசு குடியிருப்புகளில் வளர்ந்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தும், ராஜ் மற்றும் அவரது சகோதருக்கான கல்வியில் அவர்களது பெற்றோர் எந்தக் குறையும் வைக்கவில்லை.
எங்களின் தொடக்கம் ஏழ்மை நிலையில் இருந்தபோதிலும், இடைவிடாத கடின உழைப்பின் மதிப்புகளை எனது பெற்றோர் எங்களுக்குள் விதைத்தனர் என்றே சர்தானா ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.

அழுகும் உடல்கள்... சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம்
1981ல் ஜார்ஜியா டெக்கில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற சர்தானா அமெரிக்கா சென்றார். சுமார் 100 டொலர் தொகையுடன் அமெரிக்கா சென்ற அவர், கல்லூரி தேநீர் விடுதியில் பணியாற்றி, தமது செலவுகளுக்கான பணம் சம்பாதித்துள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்த கையோடு அப்போதைய H-1 விசாவும் கைப்பற்றியுள்ளார். தொடர்ந்து ஹவ்மெட் ஏரோஸ்பேஸில் வேலை செய்யத் தொடங்கினார். 1987ல் அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டது.
சவாலான முடிவொன்றை
Teledyne CAE நிறுவனத்தில் சர்தானா வேலைக்கு சேர்ந்தார். இந்த நிறுவனமே Tomahawk ஏவுகணை இயந்திரங்களை உருவாக்கி வந்தது. 1990ல் பனிப்போர் முடிவுக்கு வர ஏவுகணை தயாரிப்பும் நிறுத்தப்பட்டது.
இதனால் சர்தானா வேலை இழந்தார். மீண்டும் ஒரு நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட சர்தானா, இன்னொரு வேலை தேடுதவதற்கு பதிலாக சொந்தமாக தொழில் தொடங்கும் சவாலான முடிவொன்றை எடுத்தார்.
அதுவரையான சேமிப்பில் இருந்த 25,000 டொலர் தொகையுடன் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அந்த நிறுவனம் தற்போது Innova Solutions என்ற பெயரில் அறியப்படுகிறது.
சுமார் 50,000 பேர்கள் பணியாற்றும் இந்த நிறுவனமானது 2022ல் மட்டும் 2.4 பில்லியன் டொலர் அளவுக்கு விற்பனை மேற்கொண்டுள்ளது.
மேலும், வெறும் 8000 ரூபாய் பணத்துடன் அமெரிக்கா சென்ற ராஜ் சர்தானாவின் இன்றைய சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |