டெல்லி கார் குண்டு வெடிப்பு - பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு
கடந்த நவம்பர் 10 ஆம் திகதி, டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த காரை ஒட்டி வந்ததும், மருத்துவர் உமர் முகமது என DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
மேலும், இது ஒரு தற்கொலை தாக்குதல் என NIA தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவர்கள் உட்பட 9 பேரை கைது செய்துள்ள NIA அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில், 4 பேருக்கு இதில் தொடர்பில்லை என கூறி அவர்களை விடுத்துள்ளது.
மேலும் இருவர் உயிரிழப்பு
இந்நிலையில், இந்த கார் குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லுக்மான் (50) மற்றும் வினய் பதக் (50) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13இல் இருந்து 15 ஆக உயர்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |