பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட கூடாது - நீதிமன்றம் உத்தரவு
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணத்தை வெளியிடும் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மோடியின் பட்டப்படிப்பு
இந்திய பிரதமர் மோடி, 1978 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டமும், 1983 ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மோடியின் பட்டப்படிப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை செய்தியாளர் சந்திப்பில் காண்பித்தார்.
அதைத்தொடர்ந்து, நீரஜ் சர்மா என்பவர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்க கோரி, டெல்லி பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார்.
அவரின் விண்ணப்பத்தை பல்கலைக்கழகம் நிராகரித்தது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 1978 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை கேட்டு மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவு
2016 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பதிவேடுகளை ஆய்வு செய்ய நீரஜ் சர்மாவிற்கு அனுமதி வழங்குமாறு, டெல்லி பல்கலைக்கழகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதில், பட்டப்படிப்பு தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் காண்பிக்க தயார். ஆனால், தொடர்பு இல்லாத ஒரு நபருக்காக தனிப்பட்ட ஆவணங்களை வழங்க முடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, பட்டப்படிப்பு ஆவணங்களை வழங்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் வழங்கிய உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |