பெரும் ஆபத்தை நோக்கி இந்தியாவின் தலைநகர்! ஆக்ஸிஜனுக்காக அலையும் மக்கள்: தூக்கில் போடுவோம் என நீதிபதிகள் எச்சரிக்கை
டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான சப்ளையை தடுப்பவர்கள் குறித்து எதாவது ஒரு சம்பவத்தை உதாரணமாக அரசு காட்டினால், அவர்களை தூக்கில் போடுவோம் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா இப்போது தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும், டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், டெல்லியில் இருக்கும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் இதைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்சிஜன் சப்ளையை சீரமைத்து, முறையாக வழங்கக் கோரி ஏற்கெனவே டெல்லிஉயர்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி அமர்வு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்கியாவது மக்களுக்கு ஆக்சிஜனை கொண்டு வந்து கொடுங்கள் என்று கூறி இருந்தனர்.
இதையடுத்து, டெல்லியில் உள்ள மகாராஜா அகர்சென் மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருக்கும் நிலையில் அங்கு ஆக்சிஜன் தீர்ந்து போகும் நிலையில் இருக்கிறது.
போதுமான ஆக்ஸிஜன் சப்ளையும் டெல்லி அரசிடம் இருந்து இல்லை. இதையடுத்து, ஆக்சிஜன் சப்ளையை முறையாக வழங்கிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி அமர்வு ஆகியோர் முன் இன்று காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆக்சிஜன் சப்ளையே தடுக்கும் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் என எச்சரித்த நீதிபதிகள் ஆக்சிஜன் சப்ளையே தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை டெல்லி அரசு எங்களிடம் உதாரணமாகக் காட்டினால் போதும் அந்த அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என கடுமையாக எச்சரித்துள்ளனர்.