வீட்டு வேலை செய்யும் பெண்ணை கொடூரமாக கொலை செய்த மருத்துவர்
இந்திய தலைநகர் புதுடெல்லியில், தோல் சிகிச்சை நிபுணர் ஒருவர் தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல்
நேற்று காலை 11. 36 மணிக்கு, தெற்கு டெல்லியிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பந்தப்பட்ட வீட்டுக்கு பொலிசார் விரைய, அங்கு பெண்ணொருவர் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவர் அருகே, Dr. மணிஷ் குப்தா (50) என்பவர் அமர்ந்திருந்திருக்கிறார்.
பொலிசாரைக் கண்டதும், எனக்கு மரண தண்டனை கொடுங்கள் என்று கூறினாராம் குப்தா.
பொலிசார் அவரை கைது செய்துள்ள நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மீனா என்றும், அவர் குப்தா வீட்டில் 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்துவந்ததும் தெரியவந்துள்ளது.
குப்தா வீட்டிலிருந்து மீனாவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கிரிக்கெட் மட்டை ஒன்றும் கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குப்தா எதனால் மீனாவை கொலை செய்தார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவரும் அதே நேரத்தில், குப்தா 10 ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதற்காக அவர் மருந்துகள் எடுத்துக்கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
அதற்கும், மீனா கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |