சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட புதுமணப்பெண் வழக்கு: தலைமறைவான கணவன் சிக்கினார்
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் புதுமணப்பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் சோகத்தை உருவாக்கிய நிலையில், தலைமறைவாக இருந்த அவரது கணவன் சிக்கியுள்ளார்.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட புதுமணப்பெண்
இம்மாதம், அதாவது, மே மாதம் 8ஆம் திகதி, புதுடெல்லியில், ஒரு புதுமணத் தம்பதியர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

Nabi Karim என்னுமிடத்தில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்த நிலையில், கட்டிலின் கீழ் துணிமணிகள் வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்குள் சுமார் 28 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
விசாரணையில், ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட ஒரு இளம் தம்பதியர் அந்த வீட்டுக்கு குடிவந்ததும், அந்த மணமகன் பீஹாரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
ஆனால், அந்தப் பெண்ணின் கணவன் வீட்டில் இல்லை. தலைமறைவாகிவிட்ட அவரை பொலிசார் தீவிரமாகத் தேடிவந்தார்கள்.
தலைமறைவான கணவன் சிக்கினார்
இந்நிலையில், நேற்று முன்தினம், அதாவது, மே மாதம் 13ஆம் திகதி, அந்த நபர் மேற்கு வங்கத்தில் சிக்கினார்.

அவரது பெயர் முகம்மது இஜாஸ் (39). கொல்கொத்தாவில் பொலிசாரிடம் சிக்கிய இஜாஸிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையின்போது, பண விடயத்தில் தனக்கும் தன் மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், ஆத்திரத்தில், தான் தன் மனைவியின் கழுத்தை நெறித்துக்கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |