காதலியை 35 துண்டுகளாக வெட்டி, பாகங்களை டெல்லியில் பல்வேறு இடங்களில் வீசிய நபர்!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில், தனது காதலியை கொன்று, உடலை 35 துண்டுகளாக வெட்டி, பல்வேறு இடங்களில் வீசி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நடந்தது என்ன?
அஃப்தாப் அமீன் பூனவல்லா (28), மே 18 அன்று 26 வயதான ஷ்ரதா மதனை கழுத்தை நெரித்து கொன்றார். பொலிஸாரின் கூற்றுப்படி, அஃப்தாப் அவரது உடலை 35 துண்டுகளாக நறுக்கி, புதிய குளிர்சாதன பெட்டியை வாங்கி அதில் அவற்றை சேமித்து வைத்து, 18 நாட்கள் காலப்பகுதியில் பல்வேறு இடங்களில் உடல்பாகங்களை வீசினார்.
சந்தேகம் வராமல் இருக்க நள்ளிரவு 2 மணிக்கு உடல் உறுப்பை பாலிபேக் பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வது வழக்கம்.
காதல்
பாதிக்கப்பட்ட பெண் ஷ்ரதா மதன், மும்பையில் உள்ள மலாடில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்தார், அங்கு தான் அஃப்தாப் அமீன் பூனாவாலாவை சந்தித்தார்.
இருவரும் காதலிக்கத் தொடங்கி மும்பையில் ஒன்றாக லிவ்-இன் டுகெதரில் வாழ ஆரம்பித்தனர்.
ஷ்ரதாவின் குடும்பத்தினர் அவர்களது உறவை ஏற்கவில்லை, அதைத் தொடர்ந்து இருவரும் டெல்லியில் உள்ள மெஹ்ராலி பகுதிக்கு சென்று வாடகை வீட்டில் தங்கினர்.
திருமண பேச்சு - கொலை
அஃப்தாப் அவளை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார், ஆனால் பின்னர் ஷ்ரதா அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது, அவர் மறுத்துவிட்டார், இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. ஒரு கட்டத்தில் அஃப்தாப் ஷ்ரதாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இந்த கொலை மே 18 அன்று நடந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஷ்ரதாவின் பெற்றோர் டெல்லியின் மெஹ்ராலியில் அவரைத் தேடி வந்தபோது, அவர் காணவில்லை என தெரியவந்தது.
கடந்த நவம்பர் 8-ம் திகதி அவரது தந்தை காவல் நிலையத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்தார். பொலிஸார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, இந்த கொடூர சம்பவம் வெட்டவெளிச்சமானது.
பொலிஸார் விசாரணை
விசாரணையின்போது, அவர்கள் இருவரும் டெல்லியில் ஒன்றாக வாழ்ந்ததாகவும் ஆனால் சண்டைக்குப் பிறகு ஷ்ரதா வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறினார்.
ஒவ்வொரு முறையும் அவரை விசாரணைக்கு அழைத்தபோதும் அவரது அறிக்கைகள் வித்தியாசமாக இருந்தன, எனவே கடந்த இரண்டு மாதங்களாக ஷ்ரதாவின் தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது என்று மாணிக்பூர் காவல் ஆய்வாளர் சம்பத் பாட்டீல் கூறினார். இந்த வழக்க்கு பின்னர் டெல்லி பொலிஸார் விசாரித்தனர்.
கொலைக்கு பின்.,
அஃப்தாப் கொலை செய்தப்பின், ஷ்ரதாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டினார். சந்தேகம் வராமல் இருக்க அஃப்தாப் அதே குடியிருப்பில் வசித்து வந்தார். தினமும், Zomato-வில் உணவு ஆர்டர் செய்தார்.
அஃப்தாப், புதிதாக 300 லிட்டர் குளிர்சாதன பெட்டியை வாங்கினார், அதில் ஷ்ரதாவின் உடல் உறுப்புகளை 18 நாட்களுக்கு வைத்திருந்தார்.
ஒவ்வொரு இரவும் அதிகாலை 2 மணிக்குப் பிறகு டெல்லி முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் உடல் உறுப்புகளை வீசுவதாக மட்டும் வெளியே வருவார்.
சமையற்காரராகப் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் அஃப்தாப் பயன்படுத்திய கத்தி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கிரைம் திரைப்படங்கள்
இந்த கொடூரமான கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் அமீன் பூனவல்லா, குற்றத்தைச் செய்வதற்கு முன்பு 'டெக்ஸ்டர்' உள்ளிட்ட பல கிரைம் திரைப்படங்களையும் வெப் சீரிஸையும் பார்த்ததாக டெல்லி பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஷ்ரதாவுக்கு முன்பே அஃப்தாப் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தில் ஆஜர்
டெல்லி பொலிஸாரால் அஃப்தாப் கைது செய்யப்பட்டதை அடுத்து, திங்கள்கிழமை (14,நவ.) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றவாளியை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதித்தது.