20 ரூபாய் தர மறுத்த மனைவி... கணவர் எடுத்த பயங்கர முடிவு
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில், தன் மனைவி தனக்கு 20 ரூபாய் தர மறுத்தததால் அவரையும் கொன்றுவிட்டு, தன் உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளார் ஒரு கூலித்தொழிலாளி.
20 ரூபாய் தர மறுத்த மனைவி...
புதுடெல்லியிலுள்ள கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், தன் மனைவியிடம் செலவுக்காக 20 ரூபாய் கேட்டுள்ளார்.

அவர் அந்த பணத்தை மது குடிக்க செலவு செய்வார் என நினைத்த அந்தப் பெண் பணம் தர மறுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த அந்த நபர், அந்தப் பெண்ணின் துப்பாட்டாவாலேயே அவரது கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.
அந்தப் பெண், வீட்டில் இறந்துகிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்கவே, அவர்கள் அங்கு விரைந்துள்ளார்கள்.
அப்போது அந்தப் பெண்ணின் கணவர் அந்த வீட்டில் இல்லை. அவர் எங்கே என பொலிசார் விசாரிக்க, அவர் ரயில் பாதையை நோக்கிச் சென்றதைக் கண்டதாக சிலர் கூற, பொலிசார் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது, அந்த நபர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே வீட்டில் கடுமையான பணக்கஷ்டம் இருந்த நிலையில், 20 ரூபாய்க்காக துவங்கிய சண்டை, இரண்டு உயிர்களை பலிவாங்கியுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |