Flipkart உருவான கதை உங்களுக்கு தெரியுமா? நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு
இணையமூடாக நூல்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சச்சின் பன்சால் என்பவர் தமது நண்பருடன் சேர்ந்து துவங்கப்பட்ட நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 327000 கோடி.
தனது குடியிருப்பில் இருந்தே
இந்தியாவில் சுயமாக உருவாகிய கோடீஸ்வரர்களில் ஒருவர் சச்சின் பன்சால். அவர் தனது பில்லியன் டொலர் வணிகத்தை தனது குடியிருப்பில் இருந்தே உருவாக்கினார். கடந்த 2007ல் துவங்கப்பட்ட அந்த நிறுவனத்தின் மதிப்பு 2018ல் 20.8 பில்லியன் அமெரிக்க டொலர்.
சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகிய நண்பர்கள் இருவரும் 6,000 டொலர் முதலீட்டில் 2007ல் துவங்கப்பட்ட நிறுவனந்தான் Flipkart. பின்னி பன்சால் சுமார் 9 மாதங்கள் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றியவர்.
கூகிள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசையில் முயன்ற இரண்டு முறையும் நிராகரிக்கப்பட்டவர். 2007ல் அமேசான் நிறுவன வேலையை விட்டுவிட்டு, பின்னி பன்சால் தமது நண்பரான சச்சின் பன்சால் உடன் இணைந்து Flipkart நிறுவனத்தை துவங்கினர்.
16 பில்லியன் டொலர்
2018ல் வால்மார்ட் நிறுவனத்திடம் தமது 5.5 சதவீத Flipkart பங்கினை சச்சின் பன்சால் விற்றுள்ளார். தொடர்ந்து Flipkart-ல் இருந்து வெளியேறிய சச்சின் பன்சால் பின்னர் நவி குழுமத்தில் இணைந்தார்.
வால்மார்ட் நிறுவனம் சுமார் 16 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டு Flipkart-ல் 77 சதவீத பங்குகளை வாங்கியது. மேலும், சச்சின் பன்சால் தமது 5.5 சதவீத பங்குகளையும் 1 பில்லியன் டொலர் தொகைக்கு வால்மார்ட் நிறுவனத்திடம் விற்றார்.
தற்போதைய நிலையில் சச்சின் பன்சாலின் மொத்த சொத்து மதிப்பு என்பது 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே Forbes பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |