சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட புதுமணப்பெண்: கணவன் தலைமறைவு
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் புதுமணப்பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட புதுமணப்பெண்
புதுடெல்லியில், ஒரு புதுமணத் தம்பதியர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

Nabi Karim என்னுமிடத்தில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்த நிலையில், கட்டிலின் கீழ் துணிமணிகள் வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்குள் சுமார் 28 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
விசாரணையில், ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட ஒரு இளம் தம்பதியர் அந்த வீட்டுக்கு குடிவந்ததும், அந்த மணமகன் பீஹாரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
ஆனால், அந்தப் பெண்ணின் கணவன் வீட்டில் இல்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாக கருதும் பொலிசார் அவரைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
இந்த வழக்கின் பின்னணியில் வரதட்சணைப் பிரச்சனை இருக்கலாம் என கருதப்படுவதால், இருவருடைய குடும்பத்தினரிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |