பிரியாவிடை விழாவில் நடனமாடிய தலைமை காவலர் அதிர்ச்சி மரணம்
டெல்லியில் காவல் அதிகாரி ஒருவர், பிரியாவிடை விழாவில் நடனமாடிக் கொண்டிருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரிவு உபசரிப்பு விழா
இந்திய தலைநகர் டெல்லியில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் ரவிக்குமார். இவர் சக ஊழியரின் பிரிவு உபசரிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
அங்கு அவர் மகிழ்ச்சியாக நடனமாடியுள்ளார். ஆனால், ரவிக்குமார் திடீரென சரிந்து விழுந்தார்.
ஆஞ்சியோகிராபி
இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ரவிக்குமார் கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆஞ்சியோகிராபி செய்துகொண்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
2010யில் டெல்லி பொலிஸ் படையில் சேர்ந்த ரவிக்குமார், உத்தரப்பிரதேசத்தின் Baghpat பகுதியில் வசித்து வந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |