எங்கள் மகள்களின் ஆடைகளை கிழிப்பீர்களா? டெல்லி மாணவர்கள் போராட்டம்: அகிலேஷ் யாதவ் கேள்வி
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடியை கண்டித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்
இந்திய தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றைய போராட்டத்தின் போது மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு பிரதமர் அலுவலகம் முறையான விளக்கம் அளிக்க வேண்டியும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாணவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் அவர்கள் தெருக்களுக்கு வந்து போராடுவார்கள் என்றும் அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ் பேச்சு
பொலிஸாரின் தாக்குதல் தீவிரத்தை வெளிப்படுத்தும் விதமாக அகிலேஷ் யாதவ் பேசியதாவது, பொலிஸாரின் வன்முறையின் போது இளம் மாணவர்கள் ஈவு இரக்கமின்ரி தாக்கப்பட்டுள்ளனர். அதற்கு இந்த அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.

மாணவிகளின் ஆடைகள் கிழிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் லத்தியால் கடுமையாக தாக்கப்பட்டு, ரத்தம் சிந்திய நிலையில் விடப்பட்டுள்ளனர்.
நீங்கள் மாணவர்களை நடத்தும் முறை இதுதானா? எங்கள் மகள்களின் ஆடைகளை கிழிப்பீர்களா? இது தான் நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |