ஃபிரீஸரில் பெண்ணின் சடலம்! காதல் விவகாரம்., தாபா உணவக உரிமையாளர் கைது
டெல்லியில் தாபா உணவகம் ஒன்றில் ஃபிரீஸரில் இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
தென்மேற்கு டெல்லியின் நஜப்கரில் உள்ள ஒரு தாபாவில் 25 வயது பெண்ணின் சடலம் குளிர்சாதன பெட்டியில் இன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் கொல்லப்பட்டதாகவும், அவளது சடலம் தாபாவின் உறைவிப்பான் அறைக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாபா உரிமையாளர் சாஹில் கெஹ்லோட் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் டெல்லி உத்தம் நகரில் வசிப்பவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் தகவலின்படி, கஹ்லோட்டும் அந்த பெண்ணும் காதலித்துள்ளனர். ஆனால், கஹ்லோட் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்தார். இதனை அறிந்த அவரது காதலி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கஹ்லோட் அவரை கொன்றுவிட்டு உடலைத் தன் தாபாவின் உறைவிப்பான் பெட்டிக்குள் (Freezer) மறைத்து வைத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.