நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி
இந்தியாவின் டெல்லியில், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஒரு ஜோடி தீம் பார்க் ஒன்றிற்குச் சென்றுள்ளனர்.
ஆனால், அந்த தீம் பார்க்கில் அந்தப் பெண் மேற்கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி அவரது உயிரை பலிவாங்கிவிட்டது.
உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி
டெல்லியைச் சேர்ந்த பிரியங்கா என்ற 24 வயது இளம்பெண்ணுக்கு, நிகில் என்பவருடன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது.
இந்நிலையில், இம்மாதம் 3ஆம் திகதி, இருவரும் தீம் பார்க் ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள்.
ரோலர் கோஸ்டர் ஒன்றில் பிரியங்கா ஏற, உயரத்துக்குச் சென்றதும் அந்த ரோலர் கோஸ்டரில் ஏதோ பிரச்சினை ஏற்பட, உயரத்திலிருந்து தலைகீழாக கீழே விழுந்துள்ளார் பிரியங்கா.
படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் பிரியங்கா.
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
அனைவரும் திருமணத்துக்காக மகிழ்ச்சியாக தயாராகிக்கொண்டிருந்த நிலையில், மணப்பெண்ணாக வேண்டிய பெண் கோர முடிவை சந்தித்ததைத் தொடர்ந்து இரு குடும்பங்களும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |