உலகை தாக்க இருக்கும் அடுத்த பேராபத்து! நிபுணர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Omicron மாறுபாடை தொடர்ந்து புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சில அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் Omicron மாறுபாடு வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் Omicron சமூகப் பரவலாக மாறிவருவது குறித்து சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தலைநகர் டெல்லி Omicron பதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவிட் டெல்டா மாறுபாட்டை விட ஒமிக்ரான் மாறுபாட்டின் பரவல் அதிகம் என்று கூறப்பட்டாலும் மற்றொரு மாறுபாடு தற்போது பரவத் தொடங்கி உள்ளது.
அது தான் டெல்மிக்ரான் (Delmicron).. Delmicron என்பது கொரோனாவின் இரட்டை மாறுபாடு ஆகும். தற்போது இந்த இரண்டு வகைகளும் இந்தியா உட்பட உலகம் முழுவதும் காணப்படுவதால் கொரோனாவின் டெல்டா மற்றும் Omicron மாறுபாடு ஆகியவற்றை இணைத்து Delmicron என்ற பெயரை பெற்றுள்ளது.
இதுகுறித்து கோவிட் பணிக்குழு உறுப்பினர் ஷஷாங்க் ஜோஷி கூறியதாவது, Omicron மற்றும் டெல்டா வகையில் இருந்து உருமாறிய Delmicron ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்புக்கு வழிவகுத்துள்ளது. தற்போது டெல்டா டெரிவேடிவ்கள் (Delta derivatives) இந்தியாவில் பரவி வரும் முக்கிய வகைகளாக கருதப்படுகிறது.
உலகின் பிற பகுதிகளில் டெல்டாவுக்கு பதிலாக Omicron வேகமாக பரவுகிறது. ஆனால் டெல்டா டெரிவேடிவ் மற்றும் Omicron எவ்வாறு செயல்படும் என்பதை கணிக்க வழி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.