நடுவானில் விமானத்தை கடத்த திடீரென பயணி செய்த செயல்! அந்தரத்தில் நடந்த பரபரப்பு சம்பவத்தின் வீடியோ
அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது பயணி ஒருவர் விமானி அறைக்குள் அதிரடியாக நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நாஷ்வில் பயணித்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 386 என்ற பயணிகள் விமானத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென பயணி ஒருவர் விமானி அறைக்குள் அதிரடியாக நுழைய முயன்றுள்ளார்.
எனினும், பயணியை தடுத்து பிடித்த விமான ஊழியர், அவரின் கை கால்களை கயிறால் கட்டி பிடித்து வைத்துள்ளார்.
அந்த பயணி விமானி அறைக்குள் நுழைந்து விமானத்தை கடத்த திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து, விமானம் Albuquerque விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டதாக டெல்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Albuquerque விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிங்கியதுடன், பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
UPDATE: Raw passenger video shows the aftermath of a man who attempted to breach the cockpit of a Delta Airlines flight on its way to Nashville from Los Angeles on Friday. pic.twitter.com/2VDYp4Y3Tj
— WSMV News4 Nashville (@WSMV) June 5, 2021
கட்டி வைக்கப்பட்டிருந்த பயணியை பொலிஸ் மற்றும் எஃப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர், தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக டெல்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
— ? (@1WaySuggs) June 4, 2021
@Delta this man needs an award.. just saved the plane. LA flight to Nashville.. pic.twitter.com/WZWO7bK4L5
— rich (@NoKapRich) June 4, 2021