உலகின் மிக அழகானவர் என்ற பட்டம் வென்ற 62 வயது நடிகை! அவர் கூறும் விடயம்
2025ஆம் ஆண்டில் உலகின் மிக அழகானவர் என்ற பட்டத்தை பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூர் வென்றார்.
டெமி மூர்
ஹாலிவுட்டின் பிரபலமான நடிகை டெமி மூர். 1981யில் அறிமுகமான இவர் தற்போதுவரை கதாநாயகியாக நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான தி சப்ஸ்டன்ஸ் பாராட்டுகளை குவித்ததுடன் வசூலையும் வாரிக் குவித்தது.
இந்த நிலையில், 2025யில் உலகின் மிக அழகானவர் என்ற People Magazineயின் பட்டத்தை டெமி மூர் வென்றுள்ளார்.
வயதாவதை ஏற்றுக்கொள்கிறேன்
62 வயதாகும் டெமி மூர் (Demi Moore) கூறுகையில், "வயதாவது என்பது ஒரு அற்புதமான பரிசு. நான் ஒருபோதும் கண்ணாடியைப் பார்த்து எனக்கு வயதாகிவிட்டதே, என் முகம் வாடிவிட்டதே என்றெல்லாம் கவலைப்பட்டது கிடையாது. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.
மூன்றுமுறை திருமணமான டெமி மூருக்கு 3 மகள்கள் உள்ளனர். பிரபல நடிகர் புரூஸ் வில்லிஸ்ஸை 1987யில் இரண்டாவதாக திருமணம் செய்த டெமி மூர், 2000ஆம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |