இராணுவ சட்டத்தை அறிவித்து பின் நீக்கிய ஜனாதிபதி! கூட்டாக பதவி விலக முன்வந்த பிரமுகர்கள்..பதற்றத்தில் தென்கொரியா
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி விலகி வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பதவி விலக முன்வந்த செயலாளர்கள்
இராணுவச் சட்டத்தை அறிவித்த ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் திருப்பப்பெற்றார்.
பிரதான எதிர்க்கட்சி யூன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாலும் ஜனாதிபதி எந்த பதிலும் அளிக்கவில்லை.
எனினும் யூனின் மூத்த ஜனாதிபதி ஆலோசகர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டாக பதவி விலக முன்வந்ததாகவும், ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ காலை அட்டவணையை (புதன்கிழமை) ஒத்திவைத்ததாகவும் அவரது அலுவலகம் கூறியது.
கடுமையான மீறல்
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் 300 இடங்களுடன் பெரும்பான்மை கொண்ட ஜனநாயகக் கட்சியும், அமைச்சர்களும் யூனை உடனடியாக வெளியேறுமாறு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அல்லது அவரைக் குற்றஞ்சாட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக ஜனநாயகக் கட்சி வெளியிட்ட அறிக்கையில், "ஜனாதிபதி யூன் சுக் யோலின் இராணுவத் சட்டப் பிரகடனம் அரசிலமைப்பின் தெளிவான மீறல் ஆகும். அதை அறிவிப்பதற்கான எந்தத் தேவைகளுக்கும் அது இணங்கவில்லை.
அவரது இராணுவச் சட்டப் பிரகடனம் முதலில் செல்லாது மற்றும் அரசியலமைப்பின் கடுமையான மீறல். இது ஒரு கடுமையான கிளர்ச்சி செயலாகும். மேலும் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான சரியான காரணங்களை வழங்குகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |