கோவிட்-19 மாத்திரையை அங்கீகரித்த முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே முதல் நாடாக டென்மார்க், கோவிட்-19 எதிர்ப்பு மாத்திரைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
அமெரிக்க மருந்து நிறுவனமான Merck தயாரித்துள்ள 'மோல்னுபிரவீர்' (Molnupiravir) எனப்படும் கோவிட்-19 எதிர்ப்பு மாத்திரையைப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) முதல் நாடாக டென்மார்க் அங்கீகாரம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மாத்திரை அடிப்படையிலான சிகிச்சை லாகேவ்ரியோ (Lagevrio) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மாத்திரையானது, நவம்பர் நடுப்பகுதியில் ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி (EMA) மூலம் அவசரகால பயன்பாட்டிற்கு ஏற்கனவே ஒப்புதல் பெற்றுள்ளது.
ஏற்கெனெவே, பிரித்தானியாவில் கடந்த நவம்பர் முதல் Molnupiravir தடுப்பு மாத்திரைக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிக்கையின்படி விரைவில் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட உள்ளது.
டேனிஷ் சுகாதார ஆணையம் ஒரு அறிக்கையில், “கோவிட்-19 நோயால் கடுமையாக நோய்வாய்ப்படும் ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு ஏற்படும் தீங்குகளை விட நன்மைகள் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நம்புவதால் மாத்திரை சிகிச்சையை நாங்கள் பரிந்துரைக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், சிகிச்சையின் விளைவுகள் மற்றும் பக்க விளைவுகள் நெருக்கமாக கண்காணிக்கப்படும் என்று டேனிஷ் சுகாதார ஆணையம் உறுதியளித்துள்ளது.