கிரீன்லாந்தை அடைய முயற்சிக்கும் ட்ரம்ப்! நிறுத்த கடுமையாக வலியுறுத்துகிறேன்..நாடொன்றின் பிரதமர்
அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது முற்றிலும் அர்த்தமற்றது என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென் என தெரிவித்துள்ளார்.
ட்ரம்பிற்கு எச்சரிக்கை
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென் கிரீன்லாந்து தொடர்பில் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Pic: Reuters
மெட்டே ஃப்ரெடெரிக்சென் (Mete Frederiksen) அறிக்கை ஒன்றில், "அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்று பேசுவது முற்றிலும் அர்த்தமற்றது. டேனிஷ் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைத்துக்கொள்ள அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை.
வரலாற்று ரீதியாக நெருங்கிய நட்பு நாடான ஒரு நாட்டிற்கும், தாங்கள் விற்பனைக்கு அல்ல என்று மிகத் தெளிவாகக் கூறிய மற்றொரு நாட்டிற்கும், அதன் மக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கடுமையாக வலியுறுத்துகிறேன்" என்றார்.
மேலும் அவர், "அமெரிக்க ஜனாதிபதி நமக்கு கிரீன்லாந்து தேவை என்று கூறி, எங்களை வெனிசுலா மற்றும் இராணுவத் தலையீட்டுடன் தொடர்புபடுத்தும்போது, அது தவறு மட்டுமல்ல; அது மரியாதையற்றது" என கூறினார்.
Pic:Pascal Bastien/AP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |