டென்மார்க்கில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு: கும்பல் மோதலில் பலர் காயம்
டென்மார்க்கில் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடு
ஞாயிற்றுக்கிழமை டென்மார்க்கின் ஹோல்பேக்(Holbaek) நகரின் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் கோபன்ஹேகனுக்கு(Copenhagen) மேற்கே 70 கி.மீ தொலைவில் ஹோல்பேக் நகரம் அமைந்துள்ளது.
சட்டவிரோதமான குற்ற பின்னணி கொண்ட கும்பலுக்கு இடையே நடந்த உட்கட்சி பகை அல்லது நேரடி மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது நடைபெற்று இருக்கலாம் என்று டேனிஷ் காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

ஹோல்பேக் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த அவசர அழைப்புகளை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை என்னவென்று தகவல் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றவாளிகளை கைது செய்ய தீவிரமான விசாரணைகள் நடைபெற்று வருவதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |