வனவிலங்குகளுக்கு உணவு தேவை... நாடொன்றின் பயங்கர திட்டம்
நாடொன்றில், உயிரியல் பூங்காவில் வாழும் வனவிலங்குகளுக்கு உணவு தேவை என்பதற்காக, மக்கள் உதவியை நாடியுள்ளனர் அந்தப் பூங்காவின் ஊழியர்கள்.
வனவிலங்குகளுக்கு உணவு தேவை...
சமீபத்தில் ஜேர்மனியிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 12 குரங்குகள் கொல்லப்பட்டு சிங்கம் புலிகளுக்கு உணவாக அளிக்கப்பட்ட விடயம் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டென்மார்க் நாட்டிலுள்ள Aalborg என்னும் உயிரியல் பூங்கா, தனது பேஸ்புக் பக்கத்தில் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது.
உங்கள் வீடுகளில் தேவையில்லாத கோழிகள், முயல்கள் மற்றும் guinea pig போன்ற பிராணிகள் இருக்குமானால், அவற்றை எங்களுக்குத் தாருங்கள்.
அதுவும், அவற்றை உயிருடன் தாருங்கள். ஏனென்றால், உயிரியல் பூங்காவில் இருக்கும் சில விலங்குகள், காட்டில் தாங்கள் வேட்டையாடி சாப்பிடுவதைப்போலவே முழு பிராணிகளை சாப்பிட விரும்புகின்றன.
ஆகவே, அவற்றிற்கு உணவாக உங்கள் வீட்டிலுள்ள, உங்களுக்குத் தேவையில்லாத பிராணிகளை எங்களுக்குத் தாருங்கள் என்கிறது அந்த பேஸ்புக் இடுகை.
டென்மார்க்கில் இப்படி வீட்டில் வளர்க்கும் பிராணிகளை வனவிலங்குகளுக்கு உணவாக அளிப்பது வழக்கம்தான் என்றும் கூறுகிறது அந்த உயிரியல் பூங்கா!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |