பொதுமக்களின் வங்கிக்கணக்கில் திடீரென ரூ.1 லட்சம் வரை டெபாசிட்! வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி
இந்திய மாநிலம், தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள சில பொதுமக்களின் வங்கிக்கணக்குகளில் யாரோ ரூ.1 லட்சம் வரை டெபாசிட் செய்ததால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரூ.1 லட்சம் வரை டெபாசிட்
தெலங்கானா மாநிலம், முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள உள்ள பலரது வங்கிக்கணக்கில் நேற்று முன்தினம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை திடீரென டெபாசிட் ஆகியுள்ளது.
பொதுமக்களின் வங்கிக்கணக்கில் பணம் வந்துள்ளது என்று அவர்களுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. எஸ்.பி.ஐ (SBI ) வங்கி மட்டும் அல்லாமல் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் வந்துள்ளது.
இதனால், வாடிக்கைகையாளர்கள் யார் அனுப்பி விட்டிருப்பார்கள் என்று குழப்பம் அடைந்தது மட்டுமல்லாமல் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனால், சில பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்கில் உள்ள தொகையை ஏ.டி.எம் கார்டு மூலம் எடுத்தனர். இன்னும் சிலர், தங்களது மனைவி மற்றும் குழந்தைகளின் வாங்கிக்கணக்கிற்கு மாற்றினர்.
வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி
இதனால், தெலங்கானா மாநிலத்தில் இந்த செய்தி முழுமையாக பரவியது. அதே போல, குறுஞ்செய்தி வராத மக்கள் தங்களுக்கும் பணம் வந்துள்ளதா என்று சரிபார்த்துக் கொண்டனர்.
இதனை போல், ஆந்திர மாநிலத்தில் திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்துள்ளது. இதனால், வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், வங்கி வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்ற விவரங்களை பொலிசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேமித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |