148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி
Desa Mangaiyarkarasi says 148 tamils safe at nepal: நேபாளத்தில் 148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் என ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
நேபாளத்தில் 148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம்
நேபாளத்தில் நேற்று பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 103 பேர் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.
இதில் ஒரு பேருந்தில் சென்ற 20 பேர் பாதுகாப்பாக ராணுவ முகாமில் தஞ்சமடைந்தனர். அவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 37 பேர் குறித்து தகவல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் 49 தமிழர்கள் நேபாளம் சென்றுள்ளனர். அவர்களின் நிலை குறித்து அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதனையடுத்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகிய 4 பேரையும் டெல்லிக்கு சென்று மத்திய அரசுடன் இணைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆசிஷ் குமார் தலைமையிலான குழு நேபாளம் செல்ல உள்ளது.
இந்நிலையில் பிரபல ஆன்மீக பேச்சாளரான தேச மங்கையற்கரசி, 148 தமிழர்கள் நேபாளத்தில் பாதுகாப்பாக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நாங்கள் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்கு இரு குழுக்களாக ஆகஸ்ட் 17, 18 சென்னையிலிருந்து புறப்பட்டு காத்மண்டு வந்தடைந்தோம். தற்போது இந்த வெள்ளப்பெருக்கு குறித்து கேள்வி பட்டோம். இதில் பல வெளிநாட்டவர்களும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் பாதிப்படைந்துள்ளதை கண்டு கவலையடைந்துள்ளோம்.
நாங்கள் 148 தமிழர்கள் மற்றும் 2 வெளிநாட்டவர்கள் உட்பட 150 பேர் சாகாவில் மிகுந்த பாதுகாப்பாக உள்ளோம்.
இங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து அரசுடன் ஆலோசித்து வருகிறோம். அனுமதி கிடைத்த உடன் விரைவில் தாயகம் திரும்புவோம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |