நிஸங்கா, துஷாராவின் ஆட்டம் வீண்: சம்பவம் செய்த சாம் கர்ரன்..சூப்பர் ஓவரில் வெற்றி
துபாயில் நடந்த ILT20 போட்டியில் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணி சூப்பர் ஓவரில் கல்ஃப் ஜெயெண்ட்ஸை வீழ்த்தியது.
கல்ஃப் ஜெயெண்ட்ஸ் 179 ஓட்டங்கள்
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய கல்ஃப் ஜெயெண்ட்ஸ் அணியில் பதும் நிஸங்கா 56 (29) ஓட்டங்களும், குர்பாஸ் 40 (31) ஓட்டங்களும் விளாசினர். 
அஸ்மதுல்லா ஓமர்சாய் 13 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 20 ஓட்டங்கள் விளாச, கல்ஃப் ஜெயெண்ட்ஸ் 179 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய டெஸெர்ட் வைப்பர்ஸ் அணி அடுத்தடுத்து தொடக்க விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
எனினும், அணித்தலைவர் சாம் கர்ரன் (Sam Curran) 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 44 ஓட்டங்கள் விளாசினார்.
டேன் லாரன்ஸ் மிரட்டல்
அவரைப் போல் அதிரடியில் மிரட்டிய டேன் லாரன்ஸ் (Dan Lawrence) 31 பந்துகளில் 56 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) குவித்தார். 
கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட, டெஸெர்ட் அணி 12 ஓட்டங்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது.
இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. 
முதலில் ஆடிய டெஸெர்ட் அணி 13 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கல்ஃப் அணி 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |