அவரது அரசியல் வாழ்க்கையை... மோடி குறித்து கடுமையான கருத்தை தெரிவித்த ட்ரம்ப்
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவை நெருக்கடிக்கு உள்ளாக்கிவரும் ஜனாதிபதி ட்ரம்ப், பிரதமர் மோடி தொடர்பில் முன்வைத்துள்ள கடுமையான கருத்தொன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
மிரட்டும் தொனியில்
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா கைவிடுவதாக பிரதமர் மோடி தமக்கு உறுதி அளித்ததாக அறிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், அத்துடன் பிரதமர் மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க தாம் விரும்பவில்லை என்றும் மிரட்டும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
மோடியை தனது நெருங்கிய சர்வதேச கூட்டாளிகளில் ஒருவர் என்று அடிக்கடி புகழ்ந்து பேசும் ட்ரம்ப், மோடி ஒரு சிறந்த மனிதர் என்றும், இந்தியத் தலைவர் தன்னை நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனாலையே, அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க தாம் விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க தாம் விரும்பவில்லை என கூறியதன் பின்னணியையும் அவர் விளக்கவில்லை.
தாம் தலையிட்டு
ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடந்த மோதலை தாம் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்ததாக ட்ரம்ப் பல முறை கூறி வரும் நிலையில், இந்தியா தரப்பில் இதுவரை மறுப்பு தெரிவிக்கவும், உரிய பதிலளிக்கவும் இல்லை.
வெளிவிவகார அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து இதுவரை ஊடக சந்திப்பு அல்லது உத்தியோகப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |