தமிழக தேர்தலில் சீமானையும், டிடிவி தினகரனையும் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? வெளியான பட்டியல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களான சீமான் மற்றும் டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடும் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி,அமமுக என பலமுனை போட்டி நிலவுகிறது.
தேர்தலில் போட்டியிடும் சில நட்சத்திர வேட்பாளர்கள் குறித்தும் அவர்களை எதிர்த்து களம் காணும் வேட்பாளர்கள் குறித்தும் காண்போம்.
திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் கே.குப்பனும், திமுக சார்பில் கேபி சங்கரும் போட்டியிடுகின்றனர்.
அதே போல அமமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் கோவில்பட்டி மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் களமிறங்கும் நிலையில் திமுக சார்பில் அவரை எதிர்த்து சம்பத்குமார் போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் சென்னை சேப்பாக்கம் - திருவெல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியான பாமக சார்பில் கஸ்ஸாலி போட்டியிடுகிறார்.
அதே போல திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து அதிமுகவின் ஆதிராஜாராம் போட்டியிடவுள்ளார்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போடியில் போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து திமுகவின் தங்க தமிழ்செல்வன் களமிறங்குகிறார்.