மத்திய அமைச்சராக 36 வயதில் பொறுப்பேற்ற ராம் மோகன் நாயுடு! யார் இவர்?
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ராம் மோகன் நாயுடு இளம் வயதில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
ராம் மோகன் நாயுடு
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார். அவருடன் சேர்த்து 71 பேர் அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அவர்களில் தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடுவும் (36) ஒருவர். இவர் தான் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்ற இளம் அமைச்சர் ஆவார்.
ராம் மோகன் நாயுடுவின் தந்தை முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் எம்.பியான மறைந்த கே யர்ரான் நாயுடு ஆவார்.
இவர் 1996, 1998க்கு இடையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்தார்.
பொறியியலில் பட்டம்
ராம் மோகன் பர்டூ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து லாங் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
பின்னர் சிங்கப்பூரில் தொழிலதிபராக இயங்கிய இவர், தந்தையின் இறப்பினால் 2012யில் இந்தியாவுக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து அரசியலில் தீவிரம் காட்டிய ராம் மோகன், 2014யில் ஸ்ரீகாகுளத்தில் தன் 26வது வயதில் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டார்.
தற்போது சந்திரபாபு நாயுடுவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் ராம் மோகன். இதன் காரணமாக அவரது அரசியல் வாழ்க்கை மேலோங்கியது என்று கூறப்படுகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராகப் பணிபுரிந்த இவர், 2020ஆம் ஆண்டில் சன்சத் ரத்னா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |