ரூ.6000 நிவாரண நிதி.. 3 பிரிவுகளின் அடிப்படையில் டோக்கன் வழங்கப்படும்- தமிழக அரசின் தகவல்
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்திருந்தது.
இதற்காக பொதுமக்களுக்கு வருகின்ற 16-ம் திகதி முதல் டோக்கன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நிவாரண நிதி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதனடிப்படையில், மிக்ஜம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் திட்டம்
நிவாரண நிதி ரூ.6000- த்தை 3 பிரிவுகளாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று கூறப்படுகிறது.
அந்தவகையில்,
- ரேசன் அட்டை வைத்திருப்போருக்கு நிவாரண தொகை.
- ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தாலும் நிவாரண தொகை.
- சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நிவாரண நிதியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |