இஸ்ரேலிய மக்களால் ஆயுதங்களுடன் முற்றுகையிடப்பட்ட அமெரிக்க அரசியல்வாதி

Israel Palestine
By Arbin Jul 12, 2026 12:28 AM GMT
Report

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரைக்குச் சென்றிருந்தபோது, ​​ஆயுதம் ஏந்திய இஸ்ரேலியக் குடியேறிகள் தன்னை முற்றுகையிட்டதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா புகார் தெரிவித்துள்ளார்.

M4 துப்பாக்கிகள்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் பாலஸ்தீனர்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்களை நேரில் காணும் அனுபவமாக இதனை அவர் விவரித்துள்ளார்.

இஸ்ரேலிய மக்களால் ஆயுதங்களுடன் முற்றுகையிடப்பட்ட அமெரிக்க அரசியல்வாதி | Detained By Armed Israeli Settlers

பாலஸ்தீன கிராமம் ஒன்றில் இருந்து பேசிய ரோ கன்னா, இஸ்ரேலியக் குடியேறிகளால் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் மேற்குக் கரையின் தென்பகுதிக்கு அவரது தூதுக்குழுவினர் சென்றிருந்தபோது, ​​அவர் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த முற்போக்கு சிந்தனையுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினருமான ரோ கன்னா தெரிவிக்கையில், மேற்குக் கரையில் வலுக்கட்டாயமாகக் குடியேறியுள்ள இஸ்ரேலியர்கள் வசம் அமெரிக்கத் தயாரிப்பான M4 துப்பாக்கிகள் இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலியக் குடியேறிகளால் சேதப்படுத்தப்பட்ட ஒரு கிராமத்தில் தாங்கள் சென்றிருந்ததாகவும், அங்குள்ள பாடசாலையை அவர்கள் சேதப்படுத்தியுள்ளதையும் கிராமத்தை நாசப்படுத்தியுள்ளதையும் பார்வையிட்டதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் இஸ்ரேல் இராணுவம், அந்தக் குடியேறிகள் பக்கம் நின்றதாகவும் அமெரிக்கர்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

விம்பிள்டன் பட்டத்தை வென்றார் லிண்டா நோஸ்கோவா... உருக்கமாக அவர் கூறிய விடயம்

விம்பிள்டன் பட்டத்தை வென்றார் லிண்டா நோஸ்கோவா... உருக்கமாக அவர் கூறிய விடயம்

இந்திய வம்சாவளி ரோ கன்னா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், துப்பாக்கிகளை ஏந்தியிருந்த 21 மற்றும் 22 வயதுடைய அந்த குடியேறிகளின் கண்களில் நான் ஆணவத்தைக் கண்டேன்; எங்களைத் தடுத்து நிறுத்தியதை எண்ணி அவர்கள் ஏளனமானச் சிரித்துக்கொண்டிருந்தனர்.

எனது வரிப்பணத்தால் நிதியுதவி பெறும் அந்த இளம் இஸ்ரேல் இராணுவத்தினரிடமும் அதே ஆணவம் தெரிந்தது. அமெரிக்கர்களைத் தடுத்து நிறுத்துகிறோம் என்றோ,

அந்தப் பேருந்தில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கிறார் என்றோ அவர்கள் எந்த மரியாதையையும் காட்டவில்லை; அங்கு அமெரிக்கர்கள் இருப்பதையும், இது குறித்து அமெரிக்கத் தூதரகம் கவலை கொண்டுள்ளது என்பதையும் எங்கள் மொழிபெயர்ப்பாளர் அவர்களிடம் கூறியபோது அவர்கள் சிரித்தார்கள் என்றார்.

சட்டவிரோதமானவை

அந்தச் சம்பவம் அதிகாரத்தின் ஆணவத்தை, அதாவது எவ்விதப் பொறுப்புக்கூறலும் இல்லாத, முழுமையான தண்டனையிலிருந்து விலக்கு பெற்ற அதிகாரத்தின் ஆணவத்தை வெளிப்படுத்தியது; மேலும் இது ஒடுக்குமுறையின் நச்சுத்தன்மை வாய்ந்த கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது என்றும் கன்னா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்கத் தூதரகம் மற்றும் இஸ்ரேலியக் காவல்துறையைத் தொடர்புகொண்ட பிறகு, தானும் தனது குழுவினரும் இறுதியில் பயணத்தைத் தொடர முடிந்தது என்று கன்னா கூறியுள்ளார்.

இஸ்ரேலிய மக்களால் ஆயுதங்களுடன் முற்றுகையிடப்பட்ட அமெரிக்க அரசியல்வாதி | Detained By Armed Israeli Settlers

கிழக்கு ஜெருசலேம் உட்பட, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதி முழுவதும் உள்ள குடியேற்றங்களில் 7 லட்சத்திற்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் வசிக்கின்றனர்.

மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை சட்டவிரோதமானவை எனக் கருதுகிறது; அப்பகுதியில் குடியேறியவர்கள் மேற்கொள்ளும் வன்முறை மற்றும் பிற நடவடிக்கைகள் காரணமாக இஸ்ரேல் தொடர்ச்சியான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

1967-இல் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதிலிருந்து, அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அப்பகுதி ஒரு தன்னிறைவான பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதைத் தடுத்து வந்துள்ளன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய, உயிரிழப்புகளை ஏற்படுத்திய அக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பிறகு அந்தத் கட்டுப்பாடுகள் கணிசமாகத் தீவிரமடைந்தன. மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலில் சுமார் 300,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US