யூத ஜெப ஆலயத் தலைவருக்கு குடியிருப்புக்கு வெளியே ஏற்பட்ட துயரம்: பட்டப்பகலில் சம்பவம்
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் யூத ஜெப ஆலயத் தலைவர் ஒருவர், அவரது குடியிருப்புக்கு வெளியே கத்தியால் தாக்கி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில்
சனிக்கிழமை பகல் குறித்த சம்பவம் நடந்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. 40 வயதான சமந்தா வோல் என்பவரே கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
@facebook
2022 முதல் டெட்ராய்ட் நகரில் யூத ஜெப ஆலயத் தலைவராக செயல்பட்டு வருகிறார். மட்டுமின்றி அரசியல் ஈடுபாடு கொண்டவர் என்பதுடன் காங்கிரஸ் பெண்மணி எலிசா ஸ்லாட்கின் உட்பட பல ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றியும் உள்ளார்.
பல கத்திக் குத்து காயங்களுடன் காணப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் எனவும் தெரியவந்துள்ளது.
@dfp
பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், இந்தக் கொலைக்கும் மத்திய கிழக்கின் அமைதியின்மைக்கும் எந்தத் தொடர்பும் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
@twitter
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |