கத்தியால் குத்தப்பட்ட தாயைக் காக்க போராடிய சிறுமி: நிகழ்ந்த பயங்கரம்
அயர்லாந்து நாட்டில், தான் தாயை ஒருவர் கத்தியால் குத்துவதைக் கண்ட ஒரு எட்டு வயது சிறுமி தன் தாயைக் காப்பாற்ற முயன்றபோது அவளும் கத்தியால் குத்தப்பட்ட பயங்கரம் நிகழ்ந்தது.
தாயைக் காக்க போராடிய சிறுமி
ஞாயிறன்று, அயர்லாந்திலுள்ள Co Wexford என்னுமிடத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்த Malika Al Kattib (8)என்னும் சிறுமி, தங்கள் வீட்டு மாடியிலுள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறாள்.
இரவு 11.45 மணியளவில் கீழே ஏதோ பயங்கர சத்தம் கேட்பதை அறிந்த Malika கீழே இறங்கிவர, தன் தாயான Alish Al Kattib (31)ஐ ஒருவர் கத்தியால் குத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளாள்.
உடனே தாயைக் காப்பாற்ற குறுக்கே புகுந்த Malikaவையும் அந்த நபர் நெஞ்சிமும் முதுகிலும் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த களேபரத்தில், அவளது தந்தையான Mohammad Shakir (34)க்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் மூவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ஆனால், சிறிது நேரத்தில் Malika உயிரிழந்துவிட்டாள்.
அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் தனது 30 வயதுகளிலிருக்கும் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |