எபோலா வைரஸுக்கு எதிராக 3 புதிய தடுப்பூசிகள்
எபோலா வைரஸ் பரவலைத் தடுக்க மூன்று தடுப்பூசிகள் உருவாக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பண்டிபுக்யோ திரிபு
கடந்த மாதம் காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் பரவல் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து சமீபத்திய வாரங்களில் பிரேசில், இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவில் சந்தேகிக்கப்படும் நோயாளிகள் தோன்றியுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், அந்தப் பரிசோதனைகளின் முடிவுகள் இதுவரை எதிர்மறையாகவே வந்ததாக தெரிகிறது.
எனினும், தொற்றுபவர்களில் 50 சதவீதம் பேரைக் கொல்லக்கூடிய பண்டிபுக்யோ திரிபு குறித்து குறிப்பிட்ட அச்சங்கள் நிலவுகின்றன.
இதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையில் உள்ளனர்.
மூன்று புதிய தடுப்பூசிகள்
இந்த நிலையில், அரிதான எபோலா வைரஸ் வகைக்கு எதிராக மூன்று புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இல்லாத மிக மோசமான இந்த நோய் பரவலைத் தடுக்க விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், 2014 முதல் 2016 வரை 11,000-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த நோய் பரவலை விட அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |