நீரஜ் சோப்ராவை கொண்டாடும் இந்தியா இவரை மறந்தது ஏன்? அவர் செய்த சாதனை என்ன தெரியுமா?
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கத்தை வென்றார் நீரஜ் சோப்ரா.
இதனால் இவர் இந்தியாவின் தங்க மகன் என்று நாடு முழுவதும் போற்றப்பட்டு வருகிறார், திரும்பிய திசைகளெல்லாம் இவருக்கு பரிசு மழை கொட்டி வருகின்றது.
ஆனால் இவரை கொண்டாடிய அளவுக்கு தேவேந்திர ஜஜாரியா கொண்டாடப்படவில்லை.
அவரும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வென்றவர் தான்.
ஆம், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பாக ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு பதக்கத்தை வென்றார் தேவேந்திர ஜஜாரியா.
அது வரை 62.15 மீட்டர் மட்டுமே சாதனையாக இருந்த நிலையில், சுமார் 63.97மீ ஈட்டியை எய்து புதிய சாதனையையும் படைத்தார்.
ஆனால் இப்பொழுது நீரஜ்க்கு கிடைக்கும் புகழ், பரிசு போன்றவை தேவேந்திர ஜஜாரியாவிற்கு கிடைக்க பெற்றதா என்பது கேள்விக்குறிதான்.
இதுபோன்று அல்லாமல், இனிமேல் பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வெற்றி பெரும் வீரர்களுக்கும் தகுந்த மரியாதை கிடைக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக மாறியுள்ளது.