டெஸ்டில் எந்த ஜாம்பவான்களும் செய்யாத வரலாறு படைத்த இருவர்
நியூசிலாந்தின் டாம் லாதம், டெவோன் கான்வே கூட்டணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய தொடக்க வீரர்கள் என்ற சாதனையை படைத்தது.
462 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 575 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 306 ஓட்டங்களும் குவித்தது.
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு 462 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
வரலாற்று சாதனை
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டெவோன் கான்வே 227 ஓட்டங்களும், டாம் லாதம் 137 ஓட்டங்களும் விளாசினர்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் இருவரும் சதமடித்தனர். டாம் லாதம் (Tom Latham) 101 ஓட்டங்களும், டெவோன் கான்வே (Devon Conway) 100 ஓட்டங்களும் குவித்தனர்.
இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய தொடக்க வீரர்கள் என்ற சாதனையை லாதம், கான்வே படைத்தனர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |