கோயில் AC -ல் இருந்து வெளியேறும் கழிவு நீரை தீர்த்தம் என்று பருகும் பக்தர்கள்
கோயிலில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டி குழாயில் இருந்து வரும் கழிவு நீரை தீர்த்தம் என்று பக்தர்கள் பருகியுள்ளனர்.
வைரலாகும் வீடியோ
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், மதுரா நகரில் பிரசித்தி பெற்ற பங்கே பீஹாரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் யானை துதிக்கை வடிவில் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்பிலிருந்து தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்தது.
இந்த நீரானது கிருஷ்ணரின் காலில் இருந்து வரும் தீர்த்தம் என்று பக்தர்கள் நம்பியுள்ளனர். மேலும், இதனை குடித்தால் பிரச்சனைகள் தீரும் என்று வரிசையில் நின்று பிடித்து குடித்துள்ளனர்.
ஆனால், இதில் உண்மை என்னவென்று பார்த்தால் கோயிலின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த ஏசி மெஷினில் இருந்து தண்ணீர் வெளியேறும் குழாய் யானை துதிக்கை கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது.
Serious education is needed 100%
— ZORO (@BroominsKaBaap) November 3, 2024
People are drinking AC water, thinking it is 'Charanamrit' from the feet of God !! pic.twitter.com/bYJTwbvnNK
பின்னர், யானை துதிக்கையில் இருந்து வெளியேறும் நீரானது ஏசியின் கழிவு நீர் என்று தெரியவந்தது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |