இந்தியாவில் பாதுகாப்பான விமான நிறுவனம் எது? DGCA வெளியிட்ட அறிக்கை
இந்தியாவில் 8 விமான நிறுவனங்களில், பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி DGCA அறிக்கை வெளியிட்டுள்ளது.
விமான விபத்து
கடந்த ஜூன் மாதம், அகமதாபாத்தில் நிகழந்த ஏர் இந்தியா விமான விபத்தில், 241 பேர் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்துக்கு பின்னர், விமான பயணத்தின் பாதுகாப்பு குறித்து பயணிகள் கவலையடைய தொடங்கியுள்ளனர்.
அதைதொடர்ந்து, பல்வேறு விமான சேவை நிறுவனங்களில் நடைபெறும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான அவசர தரையிறக்கம், விமானத்தில் தீ பற்றுவது போன்ற சம்பவங்களால் எந்த விமான நிறுவனம் பாதுகாப்பானது என்ற கேள்வி பயணிகள் மனதில் எழுந்துள்ளது.
DGCA அறிக்கை
இந்நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) இந்தியாவை சேர்ந்த 8 விமான நிறுவனங்களில் ஆய்வு செய்து பாதுகாப்பான விமான நிறுவனம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், 8 விமான நிறுவனங்களில் ஒரு நிறுவனம் கூட எந்த சிக்கலும் இல்லாமல் தேர்ச்சியடையவில்லை என தெரிவித்துள்ளது. 8 விமான நிறுவனங்களிலும், மொத்தமாக 263 சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், தீவிரமான சிக்கல்கள் முதல் நிலை எனவும், தீவிரமற்ற சிக்கல்கள் 2வது நிலை எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில், ஸ்பைஸ்ஜெட்(SpiceJet), ஸ்டார் ஏர்(Star Air, ), அலையன்ஸ் ஏர்(Alliance Air), இண்டிகோ(IndiGo), குயிக்ஜெட்(Quikjet) ஆகிய நிறுவனத்தில் எந்தவிதமான தீவிரமான முதல் நிலை சிக்கலும் இல்லை.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனத்தில் 2 முதல் நிலை சிக்கலும், ஏர் இந்தியா (Air India) நிறுவனத்தில் 7 முதல் நிலை சிக்கலும், டாடா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Tata SIA Airlines) 10 முதல் நிலை சிக்கலும் கண்டறியப்பட்டது.
தீவிரமற்ற 2வது நிலை சிக்கல்
Alliance Air - 57
Air India - 44
Star Air - 41
Quick jet - 35
Air India Express - 23
indico - 23
Tata SIA Airlines - 7
Spice jet - 14
இதில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் எந்த விதமான முதல் நிலை சிக்கலும் இல்லாமல், குறைவான(14) 2வது நிலை சிக்கல்களுடன் இந்த ஆய்வின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |