50வது டெஸ்டில் சதமடித்த இலங்கை வீரர்! காலேவில் மிரட்டல் ஆட்டம்
காலே டெஸ்டில் இலங்கை வீரர் தனஞ்செய டி சில்வா 10வது சதம் விளாசினார்.
இரண்டாம் நாள் ஆட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இலங்கை அணி நேற்றைய ஸ்கோர் 242 உடன் இன்று விளையாட ஆரம்பித்தது.
தனது 50வது டெஸ்டில் ஆடும் தனஞ்செய டி சில்வா 10வது சதத்தினை பூர்த்தி செய்தார்.
In his 50th Test match, he smashes his 10th century! ?? ?#SLvPAK pic.twitter.com/TFdUkZc7b5
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 17, 2023
தனஞ்செய டி சில்வா பொறுப்பான ஆட்டம்
பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடியின் தாக்குதல் பந்துவீச்சை எதிர்த்து ஆடிய தனஞ்செய டி சில்வா, 3 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் இந்த சதத்தினை விளாசினார்.
முன்னதாக ஏஞ்சலோ மேத்யூஸ் 64 ஓட்டங்களில் நேற்று ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரமேஷ் மெண்டிஸ் தடுப்பாட்டம் ஆடி வருகிறார்.
தற்போது வரை இலங்கை அணி 75 ஓவரில் 253 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |