மழை குறுக்கீடு: இருவரின் அரைசதத்தினால் முதல் நாளில் இலங்கை 242 ஓட்டங்கள் சேர்ப்பு
Sivaraj
in கிரிக்கெட்Report this article
காலே டெஸ்டில் இலங்கை அணி முதல் நாள் முடிவில் 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இலங்கை முதலில் துடுப்பாட்டம்
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலேவில் இன்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், ஏஞ்சலோ மேத்யூஸ் - தனஞ்செய டி சில்வா கூட்டணி 131 ஓட்டங்கள் குவித்தது.
ஏஞ்சலோ மேத்யூஸ் 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து சதீரா சமரவிக்ரமா களமிறங்கினார்.
A fighting knock by Angelo Mathews ?#SLvPAK pic.twitter.com/bnFRXf62T7
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 16, 2023
தனஞ்செய டி சில்வா 94 ஓட்டங்கள்
பவுண்டரிகளை விரட்டிய அவர் 57 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தனஞ்செய டி சில்வா 94 ஓட்டங்களில் இருந்தபோது ஆட்டநேரம் முடித்துக்கொள்ளப்பட்டது.
இடையில் மழை குறுக்கிட்டதால் 65.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதனால் முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளும், நசீம் ஷா, அப்ரர் அகமது மற்றும் அக்ம சல்மான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Day 1, Stumps: Sri Lanka 242/6. DDS at the crease on 94*.#SLvPAK pic.twitter.com/H1MUyLrGzl
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 16, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |