பாகிஸ்தானுக்கு பதிலடியாக சதம் விளாசிய தனஞ்செய டி சில்வா
Dhananjaya de silva 14th test century vs pakistan: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் தனஞ்செய டி சில்வா சதம் விளாசினார்.
ராவல்பிண்டியில் நடந்து வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில், இலங்கையின் தனஞ்செய டி சில்வா 14வது சதத்தை பதிவு செய்தார்.
434 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 434 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்ய, இலங்கை அணி தற்போது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
லஹிரு குமார 42 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 58 ஓட்டங்களும் எடுத்து வெளியேற, தனஞ்செய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் கைகோர்த்தனர்.
தனஞ்செய டி சில்வா
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்செய டி சில்வா (Dhananjaya de Silva) தனது 14வது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவருக்கு இது 3வது டெஸ்ட் சதம் ஆகும்.
மறுமுனையில் அணித்தலைவர் குசல் மெண்டிஸ் (Kusal Mendis) அரைசதம் அடிக்க இலங்கை அணி 300 ஓட்டங்களைக் கடந்துள்ளது.
