மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் களமிறங்கிய தனஞ்செய டி சில்வா: ஆனால் விழுந்த அடி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கையின் தனஞ்செய டி சில்வா துடுப்பாட்டத்தில் சொதப்பினார்.
இலங்கை அணி துடுப்பாட்டம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
@englandcricket/X
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் ஆர்.பிரேமதாஸா மைதானத்தில் தொடங்கியுள்ளது.
OfficialSLC/X
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.
தனஞ்செய டி செல்வா
பதும் நிசாங்கா 21 ஓட்டங்களிலும், கமில் மிஷாரா 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் குசால் மெண்டிஸ் (Kusal Mendis) நிதானமாக ஆட, தனஞ்செய டி செல்வா 21 பந்துகளில் 10 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
AP
கடைசியாக 2023ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் விளையாடிய தனஞ்செய டி செல்வா(Dhananjaya de Silva) மீண்டும் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.
ஆனால், அடில் ரஷீத் lbw முறையில் அவரை ஆட்டமிழக்க செய்து வெளியேற்றினார்.
BCCI/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |