எங்களுக்கு மூச்சுவிடக்கூட நேரமில்லை! 233 ஓட்டங்கள் வித்தியாசம்..படுதோல்வி குறித்து பேசிய இலங்கை கேப்டன்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் படுதோல்வியடைந்தது குறித்து இலங்கை அணித்தலைவர் தனஞ்செய டி சில்வா கருத்து தெரிவித்துள்ளார்.
இமாலய இலக்கு
டர்பனில் நடந்த டெஸ்டில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 191 ஓட்டங்களும், இலங்கை 42 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 366 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்ய, இலங்கை அணிக்கு 516 எனும் இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி களமிறங்கிய இலங்கை 282 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 233 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் (Dinesh Chandimal) 83 ஓட்டங்கள் எடுத்தார்.
தனஞ்செய டி சில்வா
தோல்விக்கு குறித்து பேசிய இலங்கை அணித்தலைவர் தனஞ்செய டி சில்வா கூறுகையில், "முதல் இன்னிங்சில் நாங்கள் துடுப்பாட்டம் செய்யும்போது பிடிப்பை இழந்தோம். முதல் இன்னிங்ஸில் நாங்கள் நன்றாக பந்துவீசினோம். ஆனால் 2வது பாதியில் போதுமான அழுத்தத்தை கொடுக்க முடியவில்லை.
முதல் இன்னிங்சில் நாங்கள் அவர்களை 150 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க செய்திருக்கலாம் மற்றும் விடயங்கள் வித்தியாசமாக இருந்திருக்கலாம். எங்களுக்கு மூச்சுவிட நேரமில்லை, ஜென்சென் பந்துவீச்சில் அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் சில திட்டங்களை வைத்திருந்தோம், அது வேலை செய்தாலும் மிகவும் தாமதமானது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற சூழ்நிலையில் நாங்கள் நன்றாக துடுப்பாட்டம் செய்துள்ளோம்.
முதல் இன்னிங்ஸில் மட்டுமே நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம், ஆனால் செயல்படுத்த முடியவில்லை" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |