நடிகை நயன்தாரா மீது தனுஷ் வழக்கு! உயர்நீதிமன்றம் உத்தரவு
தனது அனுமதி இல்லாமல் திருமண ஆவணப்படத்தில் நயன்தாரா படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதாக, நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
'நானும் ரௌடி தான்' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில காட்சிகளை நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது ஆவணப்படத்தில் பதிவு செய்திருந்தனர்.
நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து, தனது அனுமதியின்றி படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் இவ்விவகாரம் தொடர்பில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மற்றும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |