தனுஷ் மகன் யாத்ராவின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்: எவ்வளவு தெரியுமா?

Yashini
in பொழுதுபோக்குReport this article
நடிகர் தனுஷ் மகன் யாத்ராவின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தேசிய விருதுகள் மட்டுமின்றி பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.
இவர் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகங்களை கொண்டவர்.
நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 திகதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளார்கள்.
இவர்கள் சமீபத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
யாத்ராவின் மதிப்பெண்
இந்நிலையில், இவர்களின் மூத்த மகன் யாத்ராவின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறித்த செய்திகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழில் 98 மதிப்பெண், ஆங்கிலத்தில் 92 மதிப்பெண், கணிதத்தில் 99 மதிப்பெண், இயற்பியலில் 91, வேதியலில் 92, உயிரியலில் 97 மதிப்பெண்கள் என மொத்தம் 600க்கு 569 மதிப்பெண் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இணையத்தில் வெளியாகி இருக்கும் இந்த மதிப்பெண்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |