விளாத்திகுளம் மாணவி வழக்கு.., குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் 11ஆம் திகதி 12ஆம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரு நபர் பைக்கில் சென்றது பதிவாகி இருந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனிஸ்வரன் கைது செய்யப்பட்டார்.
தர்ம முனீஸ்வரன் 2020ஆம் ஆண்டு மூதாட்டியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி பிரீத்தா சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சம்பவம் நடந்த 76 நாட்களிலேயே இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மேலும், குற்றவாளி தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |