12 சிக்ஸ், 1 பவுண்டரி! 56 பந்தில் 108 ரன் விளாசிய வீரர்..மிரட்டல் வெற்றி
மத்திய பிரதேச பிரீமியர் லீக் போட்டியில், ராயல் நிமர் ஈகில்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தூர் பிங்க் பேந்தர்ஸை வீழ்த்தியது.
ஜோஷி 74 ஓட்டங்கள்
இந்தூர் பிங்க் பேந்தர்ஸ் மற்றும் ராயல் நிமர் ஈகில்ஸ் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி ஹோல்கர் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய இந்தூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 173 ஓட்டங்கள் எடுத்தது. ஆதர்வ் ஜோஷி 38 பந்துகளில் 74 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) விளாசினார்.
சிக்ஸர்மழை
பின்னர் களமிறங்கிய ராயல் நிமர் ஈகில்ஸ் அணியில் ஷஷாங் பட்டிதார் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹிமன்ஷு மன்ரி 28 (17) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தொடக்க வீரர் தர்மேஷ் பட்டேல் (Dharmesh Patel) ருத்ரதாண்டவம் ஆடினார்.
சிக்ஸர்மழை பொழிந்த அவர் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 108 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 12 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடங்கும்.
கனிஷ்க் தூபே 31 ஓட்டங்கள் எடுக்க, ராயல் நிமர் அணி 16.5 ஓவர்களில் 174 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |